சிறாருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை; நில அளவையாளர் கைது

Land surveyor arrested in pocso act

காஞ்சிபுரத்தில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு சிறுவன் ஒருவனை கொலை செய்த சம்பவத்தில் நில அளவையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நில அளவையாளரான ராஜேஷ் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு காலை சிற்றுண்டி கடையில் வழக்கமாக சாப்பிட்டு வந்துள்ளார். நாளடைவில் அந்த கடையின்உரிமையாளருடைய ஒன்பது வயது மகள் மற்றும் ஐந்து வயது மகனிடம் நன்றாக பேசி பழகி உள்ளார் ராஜேஷ். அடிக்கடி அந்த கடைக்கு சாப்பிட்ட சென்று நன்றாக பேசிப் பழகிய ராஜேஷ், சிறார்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு நம்பிக்கை வளர்த்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி, சிறுவன் இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ராஜேஷ் இருவருக்கும் பாலியல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஐந்து வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றபோது சிறுவன் கத்தி கூச்சலிட்டுள்ளான். இதனால் இங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என பயந்த ராஜேஷ், சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பின்னர் சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே வைத்துவிட்டு ராஜேஷ் தப்பி ஓடிவிட்டார்.

நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்பது வயது சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நில அளவையாளர் ராஜேஷை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

kanjipuram police
இதையும் படியுங்கள்
Subscribe