Land owner arrested for illegal electrical construction

Advertisment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ளது செ.குன்னத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (40). கூலி வேலை செய்வதற்காக அன்பழகன் என்பவரது நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்படிச் செல்லும்போது அன்பழகன், வயலை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் வராமல் தடுப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்ததைஅறியாத வெங்கடேசன் கால்இடறி மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று வெங்கடேசன் உயிர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேளாண்மை பயிரை வனவிலங்குகள் நாசம் செய்யாமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைத்த நில உரிமையாளர் அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்து வருகிறது. இதற்கு அரசு ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.