Land issue father passed away police arrested his son

கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(55). கூலித் தொழிலாளியான இவரது மகன் அரவிந்தன்(23). தந்தை மகனுக்கு இடையே நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராற்றின் போது ஆத்திரமடைந்த அரவிந்தன், தனது தந்தை அண்ணாமலையை தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின்னர் அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தந்தை அண்ணாமலை தலையில் போட்டுள்ளார். இதில் அண்ணாமலை, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் திருநாவலூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அண்ணாமலை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடத்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அண்ணாமலையின் மகன் அரவிந்தனை காவல்துறையினர் கைது செய்தனர்.