sekar

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர். இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம், கிணறு உள்ளது.

Advertisment

அந்த நிலத்தின் ஒருபகுதி மற்றும் வீடு போன்றவைகளை எட்டு வழிச்சாலைக்காக அரசு கையகப்படுத்தி அளவுக்கல் நடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளச்சலில் இருந்த சேகர் ஞாயிற்றுக்கிழமை இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இவரை தேடிச்சென்ற குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் நிலத்தில் மயங்கி கிடந்தத சேகரைப்பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிப்போய் ஓடிச்சென்று அருகில் பார்த்தபோது பூச்சிமருந்து குடித்து சேகர் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினரும், உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த தகவல் கிடைத்ததும் செங்கம் போலிஸார் சம்பவயிடத்துக்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலையால் விவசாய் சங்கங்கள் மூலமாக வேறு பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.