திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் காட்டு தெள்ளுர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 70 சென்ட் தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, வெங்கடேசன் தம்பதியினர் மற்றும் சில அருந்ததியர் குடும்பங்களின் அனுபவ உரிமையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

Advertisment

 Sethupattu

இதே பகுதியில் 4 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வரும் பிற சாதியை சேர்ந்த சிலர், அருந்ததியர் மக்களின் அனுபவத்தில் உள்ள புறம்போக்கு நிலத்திற்காக அம்மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மங்களம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை.

Advertisment

இந்நிலையில் 15.2.2020 ந்தேதி இரவு, வீடு புகுந்து அருந்த்தியர் இன பெண்ணான சசிகலாவை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் செல்வன் தலைமையில் சென்ற குழுவினர் விசாரித்து புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை கிடைத்தாத வகையில் விசாரணையை விரைந்து முடித்திட வேண்டும். சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுபவ பாத்தியம் அடிப்படையில், அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கப்படுவதோடு அரசு வீடு உடனடியாக கட்டித்தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி விரைவில் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.