Skip to main content

போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி; போலீசார் தீவிர விசாரணை

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Land fraud through forged documents viluppuram

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தீர்த்த குளம் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி(60), இவரது மனைவி சாந்தா.  சாந்தாவின் தந்தை சுப்பராயனுக்கு அரசு வழங்கிய இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை மயிலத்தைச் சேர்ந்த அம்மையப்பன் என்பவருக்கு கிரயப் பத்திரம் எழுதி, அதைப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

 

சில மாதங்கள் கழித்து அதே நிலத்தை புதுச்சேரியை சேர்ந்த சம்பத் என்பவருக்கு அம்மையப்பன் சுப்பராயன் என்ற போலி நபரை பயன்படுத்தி வேறு ஒரு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதை தற்போது அறிந்த சாந்தா விழுப்புரம்  நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாந்தாவின் தந்தை சுப்பராயன் நிலத்தை போலி நபரால், போலி ஆவணங்கள் தயார் செய்து அதைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இந்த நில மோசடியில் 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதில்  போலி நபர் சுப்பராயன் கடந்த 2009 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மீதமுள்ள முருகன் ரமேஷ் ,அம்மையப்பன், சம்பத் ,ஆகிய நான்கு பேரையும் மீது மோசடி நில அபகரிப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த போலி நில அபகரிப்பு சம்பவம் மயிலம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்