Advertisment

ஜெயக்குமார் மீதான நில மோசடி வழக்கு ரத்து

Land fraud case against Jayakumar

Advertisment

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில மோசடி வழக்கு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமில்லாது அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் நவீன் மீதும் மோசடி வழக்கானது பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயக்குமார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது உறவினர் என்ற முறையில் நில அபகரிப்பிலும், அமைச்சர் என்ற முறையில் காவல்துறையை அதற்காக துஷ்பிரயோகமும் செய்துள்ளார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 2016 ஆம் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு 2021 ஆம் ஆண்டு உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஜெயக்குமார் தரப்பு வாதிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் நவீன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

highcourt police admk jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe