தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கொரோனா கால வாடகையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். 2016 முதல் உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்ய வேண்டும்.அரசாணை 318 நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகை விவசாயம் செய்யும் சிறு குறு விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றக்கூடாது.அறநிலையத்துறை சட்டம் 34ன் படி கிரையப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை வள்ளுவர்கோட்டத்தில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போராட்டத்தைத்துவக்கி வைத்துப் பேசினார்.