நாகையில் நிலம் கையெடுப்பு விவகாரத்தில் உரிய நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/THAMIMUN ANSARI_6.jpg)
நாகப்பட்டினம் - விழுப்புரம் நான்கு வழி அகலச் சாலைக்கு புத்தூர், மஞ்சக்கொல்லை, வடகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் நிலங்களை கொடுத்துள்ளனர்.
ஆனால், அரசின் வழிகாட்டல் மதிப்பின்படி, இழப்பீடு தராமல், 8-ல் ஒரு பங்கு அளவுக்குத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது என பாதிக்கப்பட்டவர்கள் இன்று, நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLAவை சந்தித்து முறையிட்டனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றவர், அந்த கோரிக்கையை கலெக்டரிடம் கூறி, உரிய இழப்பீடு பெற துணை நிற்பதாக அவர்களிடம் கூறினார்.
பிறகு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow Us