சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (36). விவசாயி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Advertisment

பழனிசாமியின் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பழனிசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது கற்களை வீசி தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பழனிசாமி, மல்லூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், காவல்துறையினர் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 Land Acquisition Complaint: Salem Collector's Office previously tried to set fire to the farmer's family

Advertisment

இதையடுத்து, நிலத்தை அபகரித்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிலத்தை மீட்டுத் தரக்கோரியும் பழனிசாமி தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக திங்கள் கிழமை (ஜூன் 24, 2019) வந்திருந்தார்.|

அப்போது பழனிசாமி திடீரென்று, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து குடும்பத்தினருடன் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் பாய்ந்து சென்று பழனிசாமியிடம் இருந்த மண்ணெண்ணெய் குவளையை பறித்துக் கொண்டு, தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

பழனிசாமியின் புகார் குறித்து விசாரிப்பதற்காக அவரையும் குடும்பத்தினரையும் சேலம் நகர காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.