Advertisment

சிபிசிஎல் நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி; விவசாயிகள் எதிர்ப்பு

 Land acquisition for CBCL; Farmers protest

Advertisment

விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி நாகையில் சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இதனால் அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகப்பட்டினம் பனங்குடி அருகே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சி.பி.சி.எல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளானது அறிவிக்கப்பட்டு 31,500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த விரிவாக்கப் பணிகளுக்கு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை எடுக்க அந்தப் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.எல் நிறுவனம் ஏற்கனவே 600 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் நிலையில் பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் 616 ஏக்கர்பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

ஒரு தரப்பு விவசாயிகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான இழப்பீட்டைப் பெற்ற நிலையில், ஒரு தரப்பு விவசாயிகள் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை எனத்தெரிவித்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தும் பணியைத்தொடங்கியுள்ளது. இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டு வருகின்றனர்.

cpcl Farmers Nagapattinam police struggle
இதையும் படியுங்கள்
Subscribe