திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை குறித்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படையை அமைத்தார். அவர்கள் திருச்சி மாநகர் முழுவதும் விடுதிகள் உட்பட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 Lalitha jewelery robbery ... Investigations on 5 people in Pudukkottai

Advertisment

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும், சாந்தநாதபுரத்தில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

 Lalitha jewelery robbery ... Investigations on 5 people in Pudukkottai

இந்நிலையில் லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரத்தில்புதுக்கோட்டையில் வட இந்திய கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.