
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த வருடம் அக்டோபர் 2- ஆம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் (45), அவரது சகோதரி மகன் சுரேஷ் (28) மற்றும் மடப்புரம் மணிகண்டன் (34) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான முருகன் கடந்த ஆறு மாதமாக உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Follow Us