lake bath incident at kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளதுரங்கப்பனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது காமராஜ். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயது அர்ச்சனா. இருவரும் நண்பர்கள்.

Advertisment

கடந்த 25ஆம் தேதி மாலை அவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள ஏரியில் குளித்து விட்டு வருவதற்காக,தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். குளிக்கச் சென்ற அவர்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதனால், அவர்களது குடும்பத்தினர் குளிக்கச் சென்ற ஏரி பகுதிக்குச் சென்று தேடிப்பார்த்தனர். இருவரும் கிடைக்கவில்லை. இருவரும் நடுத்தர வயது மனிதர்கள். இப்படிப்பட்டவர்கள் ஏரியில் குளிக்கும்போது மூழ்கிஇறந்திருக்க வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இருப்பினும்,இருவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Advertisment

இந்நிலையில், வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார், சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர். காமராஜ் அர்ஜுனன் இருவரும் குளிக்கச் சென்ற அந்த ஏரியில் இறங்கி, பொதுமக்கள் உதவியுடன் தீவிரமாகத் தேடினர். இரவு முழுதும் தேடிய நிலையில், நேற்று மாலை இருவரையும் ஏரிக்குள் இருந்து சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து அவர்களது உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமணைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறந்துபோன இருவரும் கூலித் தொழிலாளர்கள்.இவர்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் மனைவி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் கதறியழுதனர். ஊர் மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தினசரி சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன.

எனவே, "பொதுமக்கள் அவரவர் ஊரில் பகுதிகளில் உள்ள ஆறுகள் ஏரிகள் குளங்களில் குளிப்பதற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஊராட்சி சார்பாக, பொதுக் குழாய்கள்பம்பு செட்டுகள் உள்ளன. இவற்றில் சென்று குளிக்க வேண்டும், என்பதைப் பற்றி கிராம மக்களுக்கு அரசு சார்ந்த துறையில் உள்ளவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.