The lake bank broke and the flood entered the town - the villagers are suffering

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பட்டியில் திடீரென ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து 50க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்துள்ள கல்வராயன் மலையடிவாரத்தில் இன்று அதிக அளவு மழை பொழிந்தது. இதனால் ஓடைப்பகுதியில் அதிகமாக தண்ணீர் வந்தது. இந்நிலையில், அந்தப்பகுதியில் உள்ள ஏரியின் கரை உடைந்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் கொசப்பட்டி மட்டுமல்லாது செல்லம்பட்டி, ஜவுளிக்குப்பம் உள்ளிட்ட பல ஊர்களிலும் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.