தற்கொலை வரை சென்று காதலனை கரம் பிடித்த பெண்... போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி எனும் பகுதியை அடுத்த பாணுரங்கன் தொட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா. இவர், திருப்பூர் ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக காவலரான கண்ணன் என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் நெருங்கிப் பழகியதால் நதியா கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் காதலுக்கு இருவரின் பெற்றோர் தரப்பிலும் எந்தவித எதிர்ப்பும் இல்லையென சொல்லப்படுகிறது. அதனால் திருமணம் செய்துகொள்ளலாம் என நதியா கூறியுள்ளார். ஆனால் அதற்குக் கண்ணன் சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நதியா தற்கொலைக்கு முயன்றார்.

police

police

பின்பு அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா விசாரணை மேற்க்கொண்டதையடுத்து கண்ணன் நதியாவுடன் சேர்ந்து வாழ சம்மதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், காதலர்களான இரண்டு காவலர்களும் தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம சுவாமிக்கோவிலில் போலீசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தற்கொலை செய்யும் அளவுக்கு முயன்று காதலனை கரம் பிடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு அந்த பகுதியில் ஏற்பட்டது.

incident lovers marriage police
இதையும் படியுங்கள்
Subscribe