/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/love ilegal.jpg)
கள்ளக் காதலனுடன் உறவை தொடர தனது சொந்த 15 வயது மைனர் மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் தா.பொட்டக்கொல்லை அருகே உள்ள வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியா. இவருக்கும் இவரது உறவினரான ராஜ் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கள்ளத் தொடர்பு வெளியில் தெரியாமல் இருக்க தனது மைனர் மகளை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது தாய் சத்யாவுக்கும், கணவர் ராஜ்க்கும் உள்ள தொடர்பு தெரியவந்ததை அடுத்து மனமுடைந்து மைனர் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனை அடுத்து மைனர் பெண்ணை அவரது தாயார் சத்யாவும், சத்யாவின் தாய் சாந்தியும் கள்ளத் தொடர்பை வெளியே சொல்லகூடாது எனவும், மீண்டும் ராஜூவிடம் சேர்ந்து வாழ வேண்டும் என மைனர் பெண்ணை சூடு வைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
கொடுமை தாங்காத மைனர் பெண் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து மைனர் பெண்ணின் தாய் சந்தியா, சந்தியாவின் தாய் சாந்தி, மைனர் பெண்ணின் கணவன் ராஜ் மற்றும் அவரது தாய் மாரியம்மாள் ஆகியோரின் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)