கரோனா இரண்டாம் அலையின் பரவலால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. அந்த வகையில், தற்போது பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (16.06.2021) எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா தடுப்பூசி போடப்பட்டது.