தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்துள்ளது.மத்திய அரசு தரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 24 சதவிகிதமாக இருப்பதால் தமிழகத்தில் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z5_17.jpg)
இதனால் தமிழகத்தில் ரேஷனில் மக்களுக்குவழங்கப்படும் மண்ணெணெய் அளவு குறைக்கப்படும். ரேஷனில் எவ்வளவு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என குடும்ப அட்டைதாரர்களுக்கு விளம்பரப்படுத்துங்கள் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும்உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
Follow Us