Advertisment

கூலித்தொழிலாளி கொடூரமாக வெட்டிக் கொலை

  labourer was brutally hacked to passed away

Advertisment

மணப்பாறை அருகே கூலித்தொழிலாளி ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேதாளகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ந.தங்கபாண்டியன் (35). இருவருக்கும் அருகே உள்ள அனியாப்பூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த போதும்பொண்ணு(22) என்பவருக்கும் திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தையும்ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் போதும்பொண்ணு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் படுத்திருந்த தங்கபாண்டியன் 8 இடங்களில் வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்துதகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான வையம்பட்டி போலீசார் தங்கபாண்டியன் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணைசெய்து வருகின்றனர்.

manapparai police
இதையும் படியுங்கள்
Subscribe