Advertisment

கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ; கூலித் தொழிலாளி பலி

Advertisment

Labourer passed away in tractor overturn accidents in Quarry

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலைகிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள SRG என்ற தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்க டிரில்லர் போட்டு வெடிமருந்து வைப்பதற்காக டிராக்டர் மலை மீது ஏறியது.

Advertisment

அப்போது எதிர்பாராத விதமாகத்திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், தலைகீழாகக் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடகடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 28 வயதான குமார் என்ற கூலித் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தவாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குவாரிசட்ட விரோதமாக விதிகளை மீறி இயங்கி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

quarry ranipet workers
இதையும் படியுங்கள்
Subscribe