Laborer lost their life near Sivagiri

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த எல்லப்பாளையம் அருகே உள்ள தட்டங்காடு பகுதியைசேர்ந்தவர் சுப்பிரமணி (58). இவரது மனைவி கண்ணம்மாள். சுப்பிரமணி விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisment

சுப்பிரமணி அடிக்கடி மது அருந்திவீட்டுக்கு வந்ததால், அவரது மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு இளைய மகனுடன் அருகில் வசித்து வந்தார். சுப்பிரமணி தனியாக இருந்து கொண்டு கண்ணம்மா வீட்டுக்கு சாப்பிட மட்டும் சென்று வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சுப்பிரமணி கையில் மண்ணெண்ணெய் கேனை வைத்துக்கொண்டு போதையில், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுப்பிரமணி திடீரென மண்ணெண்ணெய் கேனை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வேதனை தாங்காமல் அலறிய சுப்பிரமணியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, போர்வை போர்த்தி, தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment