Laborer lose their live due to lack of doctors; Public roadblocks

விருத்தாசலம் மருத்துவமனையில் மருத்துவர்கள் வராததால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கச்சி பெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ். கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பொழுது ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ரமேஷை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மூன்று மணி நேரம் மருத்துவர்கள் வராமல் இருந்ததால் செவிலியர்கள் மட்டுமே ரமேஷுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

Advertisment

தொடர்ந்து சிகிச்சை பலனிலிருந்து ரமேஷ் உயிரிழந்தார். மருத்துவர்கள் வராத அலட்சியத்தால்ரமேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்றே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரமேஷின் உடலை வாங்க மறுத்து இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கான காரணம் குறித்து அறிவதற்கு தனியாக குழு அமைக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட கூலித் தொழிலாளி ரமேஷின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment