தொழிலாளர் அமைப்புகள் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம்! (படங்கள்)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பி.ஆர் பாண்டியன் தலைமையில், விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Farmers Protest Labor Associations protest
இதையும் படியுங்கள்
Subscribe