Advertisment

தொழிலாளர் தினத்தில்.. உயிரை கொடுத்து 10 தொழிலாளிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!!

மே முதல் நாள்... உழைப்பாளர்கள் தினம்.. தொழிலாளர் தினம்.. இந்த தினத்திலும் வேலைக்கு போனால்தான் வறுமையை விரட்ட முடியும் என்ற நிலையில் தான் உடல் உழைப்பாளர்கள் உள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள மக்கள் விவசாய வேலைகளுக்காக பல கிராமங்களுக்கும் சென்று வருகிறார்கள். இவர்கள் மொத்தமாக வயல் வேலைகளுக்கு செல்ல குட்டியானைகளில் சென்று வருகின்றனர். வயல் வேலைகள் முடிந்து கால்நடைகளுக்கு புல் அருத்துகொண்டு மாலையில் அதே குட்டியானைகளில் புல் கட்டுகளையும் ஏற்றிக் கொண்டு வீடு வந்து சேருவார்கள்.

Advertisment

.The driver who saved 10 lives loss his life

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இப்படித்தான் இன்று மே தினத்திலும் பெண் விவசாய தொழிலாளர்கள் கீரமங்கலம் மேற்கு பகுதியில் இருந்து அன்பழகன் என்பவரின் வாகனத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏறி கீரமங்கலம் வடக்கு பகுதி வயலுக்கு வேலைக்குச் சென்றனர். வாகனம் அம்புலி ஆற்றுப்பாலத்தை நெருங்கும் போது வாகனத்தை ஓட்டிய அன்பழகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் வாகனம் நிலைதடுமாறியது. ஒரு கையில் நெஞ்சையும் மறு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக் கொண்டவர் வாகனத்தை ஓரங்கட்டமுடியாமல் திணறிய நிலையில் பாலத்தில் மோதினால் வாகனத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தவர் நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்தார். சாய்ந்தவரை பெண்கள் தண்ணீர் தெளித்து எழுப்பியும் பயனில்லை.. அந்த வழியாக சென்ற மற்ற ஓட்டுநர்கள் அதே வாகனத்தில் ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். ஆனால் அதற்குள் அன்பழகன் உயிர் பிரிந்திருந்தது.

இதைப்பார்த்து கதறிய பெண்கள் தொழிலாளர் தினத்தில் எங்கள் 10 பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை கொடுத்திருக்கிறார் என்று கதறினார்கள்.

death driver may 1 save
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe