ADVERTISEMENT

சமமான அளவில் அச்சிடப்பட்டுள்ள எல்.முருகன், பொன்முடி பெயர்கள்! 

02:55 PM Jul 28, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (29/07/2022) நடைபெறவுள்ள நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரும், அமைச்சர் க.பொன்முடி பெயரும் ஒரே இடத்தில் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக, அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பெயரும் சரி சமமாக இடம் பெற்றிருந்தனர்.

முன்னதாக, காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக எல்.முருகன் பங்கேற்றதும், அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு முன்பு அவர் பெயர் இடம் பெற்றதும் சர்ச்சையானது. அமைச்சர் க.பொன்முடி அந்த விழாவைப் புறக்கணித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இருவரது பெயர்களும் சரி சமமான அளவில் முதலமைச்சர் பெயருக்கு கீழ் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT