Skip to main content

முருகனின் அறுபடை வீடுகளுக்கும் ஈரோட்டுக்கும் என்ன சம்பந்தம்? - திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் கேள்வி!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

L murugan planing vel yatra in erode


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் தொடர்ந்து வேல் யாத்திரையை நடத்தத் திட்டமிட்டுவருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொள்ள பா.ஜ.க முடிவு செய்துள்ளது. 


இதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 20ஆம் தேதி எல்.முருகன் வருகை தர உள்ளார். அன்றைய தினம் ஈரோடு சம்பத் நகரில் இருந்து வேல் யாத்திரை தொடங்க உள்ளது என அறிவித்துள்ளார்கள். ‘முருகனின் அறுபடை வீட்டுக்கும் ஈரோட்டுக்கும் என்ன சம்பந்தம்? இது முழுக்க முழுக்க அரசியல் பிரச்சாரம். மக்களைப் பிளவுபடுத்தும் இந்தச் செயலை தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் நடத்த விடமாட்டோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறை, ஈரோடு வரும் முருகனை திருப்பி அனுப்ப வேண்டும். கூட்டம் கூடவோ, ஊர்வலம் செல்லவோ அனுமதிக்கக் கூடாது. மீறினால் பா.ஜ.க தலைவர் முருகனை கைது செய்ய வேண்டும்’ எனத் திராவிட இயக்கங்களும் தமிழ் அமைப்புகளும் அரசுக்கும் காவல் துறைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்