L. Murugan looked at the volunteer with his upper hand while putting on the shawl

சால்வை அணிவித்த பாஜக தொண்டரின் கை மேலேபட்டதால் மதிய இணை அமைச்சர் எல்.முருகன் தொண்டரை பார்த்து முறைத்த சம்பவம் கண்டனத்தை பெற்றுவருகிறது.

சென்னை பல்லாவரம் கண்டோல்மென்டில் தேசிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த அவரை பல்வேறு பாஜக தொண்டர்கள் வரவேற்றனர். பலர் சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர். அப்பொழுது பாஜக தொண்டர் ஒருவர் எல்.முருகனுக்குசால்வை அணிவித்துவிட்டுஅவர் தோள் மீது எதேர்சையாக கை வைக்க முயன்றார். அப்போது எல்.முருகன் உடலை திருப்பிக்கொண்டதோடு, அவரைப் பார்த்து முறைத்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதற்கும்கண்டனமும்எழுந்து வருகிறது.