
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''12 நாட்டிக்கல் மைல் அதற்குப் பிறகு ஸ்டேட், அதனையடுத்து பொருளாதார எல்லை,அதனைத்தாண்டி சர்வதேச எல்லை. 200 கிலோமீட்டர் இருக்கக்கூடிய சர்வெதேச எல்லை 20 கிலோ மீட்டரில் வருவதால் தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. நிச்சயமாக வருகின்ற காலத்தில் ஜாயின் கமிட்டி மூலமாக மீனவர்கள் கைது செய்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
Follow Us