/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_227.jpg)
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக 16.04.2021 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் 17.04.2021 அன்று அதிகாலை சுமார் 04.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்கு இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் அவரது உடலுக்குப் பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விவேக்கின் உடல், அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவல்துறை மரியாதையுடன் 78 துப்பாக்கிகுண்டுகள் முழங்க இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்பு, தகன மேடையில் உள்ள விவேக்கின் உடலுக்கு மகள் தேஜஸ்வினி இறுதி சடங்குகளைச் செய்தார். அதைத் தொடர்ந்து, விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_992.jpg)
அதனைத் தொடர்ந்து நேற்று (18.04.2021), தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். மேலும் விவேக்கின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)