L Murgan spoke about nia investigation on PFI

Advertisment

திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், “பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு வாகனங்கள் தாக்குதலுக்கு ஆளாகிறது. இது போன்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் என்.ஐ.ஏ. தவறுதலாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. என்.ஐ.ஏ. சோதனை தேசத்தின் பாதுகாப்பு கருதி சரியான ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது. ஆனால் என்.ஐ.ஏ. சோதனையை ஓட்டு வங்கி அரசியலுக்காக திமுக பயன்படுத்துகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக கூறியுள்ளது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பூர்வாங்க பணிகளில் 95 சதவீத பணிகள் மட்டும் நிறைவுற்றது என்ற கருத்து அடிப்படையில் நட்டா தெரிவித்துள்ளார். பட்டியல் இனம் உள்ளிட்ட அனைத்து இந்துக்களையும் ஆ .ராசா தவறாக பேசியுள்ளார்” என்று தெரிவித்தார்.