Skip to main content

மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது  - கி.வீரமணி

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற எல்லாமே ‘‘ஒரே ஒரே’’ என்று கூறும் மத்திய பி.ஜே.பி. அரசு  - இப்பொழுது ஒரே ரேசன் கார்டு என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 

ஒற்றை ஆட்சி முறைக்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடு

ஒரே நாடு (இந்துராஷ்டிரம்), ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே கலாச்சாரம் (சமஸ்கிருத கலாச்சாரம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கு விடை கொடுக்கும் ஒரே அதிபர் என்பதை நோக்கியே) என்கிற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது,
கூட்டாட்சித் தத்துவத்தை (Federal) ஒழித்து, மாநில உரிமைகளைப் பறித்து, ஒற்றை (மத்திய) ஆட்சி முறைக்கே (Unitary system of Government) என்பதற்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

 

k

 

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட சலுகை விலையில் (கோதுமை 2 ரூபாய், அரிசி கிலோ மூன்று ரூபாய்) என்பது போன்று தருவதை மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றவர்களும் (Migrant Population) பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்  வெளிப்படையாகக் கூறியுள்ளார்!

‘‘The biggest beneficiary of this he (Paswan) said, would be migrant labourers who move to other states to seek better job opportunities.’’

அந்தந்த மாநிலத்தின் உணவு நிலவரம், உணவு விநியோக முறை எல்லாம் ஒரே சீரான முறையில் இருக்கிறதா என்பது முதல் கேள்வி.

 

‘ஆமாம் சாமி’ போட்டு தமிழக அரசு 
தலையாட்டி விடக்கூடாது
இரண்டாவது மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சட்டம்  -ஒழுங்கு பிரச்சினைகளிலும், திருட்டு, செயின் பறிப்பு, இரயில் கொள்ளை முதலிய பலவற்றிலும்  ஈடுபடும் அதிகமான வெளிமாநிலத்துக் கும்பல்கள் இங்கே வீடு பிடித்து, ‘டிப் டாப்’ ஆசாமிகளாக வாழ்வதோடு, விமானத்தில் வந்து ஆடம்பர ஒப்பனையோடு கொள்ளைகள் நடத்திய செய்திகளை எவரே மறுக்க முடியும்?

 

தமிழ்நாடு அரசு இப்பிரச்சினை, அதன் நிலைப்பாடு (Stand) என்னவென்பதை தெளிவுபடுத்தி, இத்திட்டத்தை ஏற்க மறுக்கவேண்டும் துணிவுடன். ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது.

 


மாநிலத்தின் உரிமைப் பிரச்சினை:
தமிழ் மாநிலத்தின் உணவு உரிமை என்பதைவிட, நம் மாநிலத்தின் உரிமைப் பிரச்சினை இது என்பதால், தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ளவேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வரவேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தளராது செயல்பட்டு வருபவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

kamalhassan birthday wishes to k veeramani

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் ‘வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டு வருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர்  கி. வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

 

 

 

Next Story

“பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பெரியாரின் கொள்கை தான் அடித்தளம்” - சோனியா காந்தி

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Sonia Gandhi says Periyar's policy is the foundation to bring down the BJP

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதே போல், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி ஆதரவை பெருக்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்துக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பெரியார் திடலுக்கு என்னை அழைத்தற்கு நன்றி. மேலும், இந்தியா கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி. 

 

சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்களின் மூலம் தான் மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பெரியாரின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் தான் நம்மை வழி நடத்தும். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.