Skip to main content

குட்கா வழக்கு... முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு சம்மன்

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோர் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Kutka Case ... summon to Former DGP DK.Rajendran

 

இரண்டாம் தேதி டிகே.ராஜேந்திரனும். மூன்றாம் தேதி தினகரனும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின்  246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தற்போது இந்த சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனை மூலம் 639 கோடிக்கு சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமோசாவில் கருத்தடை சாதனம்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Shocking information that came out on A contraceptive device in a samosa;t!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் பிம்பரி - சின்ச்வாட் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் சமோசா மிகவும் பிரசித்தி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (08-04-24) இந்த கேண்டீனில் விற்கப்பட்ட சமோசாவில் மாட்டிறைச்சி, கருத்தடை சாதனம், கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் கலந்து விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக அந்த கேண்டீனுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், போலீசாருக்கு கிடைத்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த சமோசாக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மற்றும் மசார் ஷேக் ஆகியோரின் எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ், அந்தத் தனியார் நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தத்தை வைத்திருந்தது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ் வழங்கிய சிற்றுண்டியில் ஒரு முறை பேண்டேஜ் இருந்ததால் இவர்களின் ஒப்பந்தத்தை, அந்தத் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னர், அந்த நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸின் நிறுவனர்களான ரஹீம் ஷேக், அசோர் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர், மனோகர் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை அழைத்து, சமோசாவில் கருத்தடை சாதனம், குட்கா, மாட்டிறைச்சி, புகையிலை போன்ற பொருட்களை அடைத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்ட மனோகர் எண்டர்பிரைசஸின் ஊழியர்களான ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர், சமோசாவில் அந்த பொருட்களை அடைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மசார் ஷேக், ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.