Kushpu inspection at Kallakurichi police station

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 61 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

Kushpu inspection at Kallakurichi police station

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்திருந்தது. அதோடு நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து காவல் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதனயடுத்து கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து கள்ளச்சாராய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.