Advertisment

''திருமாவளவனுக்கு கொள்கை இருந்தால் பேசட்டும்'' - நடிகை குஷ்பு பேட்டி! 

kushbu press meet in madurai

Advertisment

'சர்ச்சைக்குரியவற்றையே பேசுகிறார் திருமாவளவன். அவருக்கு கொள்கை இருந்தால் அதை மக்களிடம் பேசுவது நல்லது' என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் குஷ்புகூறியுள்ளார்.

பா.ஜ.க. சார்பாக மதுரை தெப்பக்குளத்தில் நேற்று'நம்ம ஊர் பொங்கல்' விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு நிகழ்ச்சிக்கு பின்செய்தியாளர்களைச்சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''பா.ஜ.க. பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒருவர் குரல் கொடுத்தாலே போதுமானது. பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு தெருக்களிலும் பா.ஜ.க.வின் கொடிப் பறக்கிறது என்பதில் மாற்றமில்லை.

.

Advertisment

நான் எங்கு போட்டியிட போகிறேன் என்பது எனக்கே தெரியாது. டெல்லி மேலிடத்தலைமையும், இங்கே இருக்கக்கூடிய தலைவர்களும் தான் அதை முடிவு செய்வார்கள். ஆனால் வருகிற சட்டமன்றத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக இருந்தாலும்சரி, யாரோடும் போட்டியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன்.

உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு கண்டனத்துக்குரியது.கமலுக்கு நான் எதிராகப் பேசவில்லை, இருப்பினும் கூட, இல்லத்தரசிகள் தினந்தோறும் அவர் தம் இல்லங்களில் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்பின் காரணமாக இந்த பணிகளைச் செய்கிறார்கள் ஊதியத்தை எதிர்பார்த்து அல்ல.

பெண்களுக்கு எதிராக யார் பாலியல் வன்கொடுமை செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சி பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திரையரங்குகள் 50% தற்சமயம் செயல்பட்டு வருகிறது. இதை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது என்பது என் கருத்து.

இந்தமுறை பிஜேபியின் சார்பாக அதிக பெண்கள் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுத்ததே பிரதமர் நரேந்திர மோடிதான். பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர்தான் பேசி வருகிறார். பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறார். திருமாவளவன் சர்ச்சை பேசுவதே அவருடைய கொள்கையாகவைத்துள்ளார்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கொள்கை ஏதேனும் அவரிடம் இருந்தால் அதை பேசசொல்லுங்கள்'' என்று தெரிவித்தார்.

kushboo madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe