Skip to main content

குரங்கணி வனப்பகுதியில் 9 பேர் உயிரிழப்புக்கு அரசே பொறுபேற்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published on 12/03/2018 | Edited on 12/03/2018
k.balakrishnan cpim




தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டனர். காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

இந்த சம்பவம் அறிந்து அங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்,
 

9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மலையேறுபவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அடிக்கடி இந்த வனப்பகுதிளில் தீ பரவுகிறது. அதற்கு என்ன காரணம் என்று இதுவரை அரசு சொல்லவில்லை. அதனை தடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீ தடுப்பு காவலர் பணிகளுக்கான இடங்களை கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உயர்கட்ட விசாரணை குழு நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சமும், அரசு வேலையும் கொடுக்க வேண்டும். காயம் அடைந்தோருக்கு 5 லட்சமும், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். இதனைப் பற்றி இங்கு வந்த துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார். 

 

சார்ந்த செய்திகள்