குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த சிவசங்கரி

ராஜசேகர் (29)

Advertisment

சாதனா (11)

பாவனா(12)

ஈரோட்டை சேர்ந்த சதீஷ்

Advertisment

நேகா(9)

பிரபு(30)

கண்ணன்(26)

சபிதா

கவிதா சுப்ரமணியன்

சென்னையை சேர்ந்த பூஜா(27)

நிஷா

சஹானா(20)

மோனிஷா(30)

ஸ்வேதா(28)

நிவேதிதா(23)

இலக்கியா(22)

விஜயலட்சுமி(22)

அனுநித்யா(25)

சேலத்தை சேர்ந்த தேவி உள்பட 27 பேர் மீட்கப்பட்டள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேபோல் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலும் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினருடன் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்படரிலும் மீட்பு பணி நடந்து வருகிறது.