/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamal Kurangani fire 500.jpg)
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில்,
''குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என தெரிவித்துள்ளார்.
Follow Us