Skip to main content

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம்: கமல்

Published on 12/03/2018 | Edited on 12/03/2018
Kamal Twitt


தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 
 

இந்த நிலையில் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், 
 

''குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் பதிவிட்ட வீடியோ... கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்...

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட வீடியோ ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, பலரும் அதனை கிண்டல் செய்தும் வருகின்றனர்.

 

kiren rijiju went viral in twitter

 

 

கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளஒரு வீடியோவில் இளைஞர் ஒருவர் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேன்டின் பின்பக்கத்தில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் ஒன்றுசேர்ந்து கூடு அமைத்துள்ளது. இந்த வீடியோவுக்கான கேப்சனில், தேனீக்களின் கூடானது விரும்பத்தகாத இடத்தில் உள்ளது. ஆனால் இது நாகாலாந்தில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட்டை பார்த்த இணையவாசிகள், இது எப்படி என வியப்புடன் கேள்வி எழுப்பியும், அந்த வீடியோவையோ கிண்டல் செய்தும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

 

 

 


 

Next Story

குரங்கனியில் மீண்டும் ஒரு காட்டுத்தீ! பீதியில் மலைமக்கள்

Published on 29/07/2018 | Edited on 29/07/2018

துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான  போடி தொகுயில் உள்ளது குரங்கனி. இந்த குரங்கனியில்தான்  கடந்த  ஆறு மாதங்களுக்கு முன்பு  சென்னை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து நடை பெயர்ச்சிக்கு வந்த 40க்கு மேற்பட்ட  சுற்றுலா பயணிகள் குரங்கனியிலிருந்து  வனப்பகுதி வழியாக தனியார் தேயிலை தோட்டம் வரை  சென்று விட்டு திரும்ப மறு நாள் காலையில் திரும்பவும் நடைபயிற்சியோடு வனப்பகுதியில்  உள்ள  ஒத்த மரம் அருகே வரும் போது திடீரென பரவி வந்த  காட்டுத் தீ அந்த சுற்றுலா பயணிகள் மீது பரவியதால் உயிருக்கு பயந்த அந்த  சுற்றுலா பயணிகள் அருகே இருந்த பள்ளத்தில்  ஒருவர் மீது  ஒருவராக விழுந்தனர் ஆனால்  அந்த  பள்ளத்திலும் காட்டு தீ பரவி இருந்ததால் அந்த  பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணிகளில் பத்து பேர் சம்பவ இடத்திலையே தீ க்கு பலியானர்கள் 22 பேர் அந்த  காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மதுரையில் உள்ள  அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்த்து தீவிர சிகிச்சைகள் செய்தும் கூட 19 பேர்  இறந்தனர். ஏற்கனவே பத்து பேர் இறந்ததும் மொத்தம் சேர்த்து 29 பேர் அந்த காட்டு தீயில் கருகி இறந்தது தமிழகத்தையே சோகத்தில் மூழ்கியது. அதன் அடிப்படையில் இந்த  எடப்பாடி அரசும் கூட விசாரணை கமிஷன் வைத்து விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தும் கூட இன்னும் எடப்பாடி அரசு அதன் அறிக்கையை வெளியிட வில்லை. 

 

forest

 

 

 

இந்த நிலையில் தான்  போடியிலிருந்து பரமசிவன்  கோவில்  பின்புறமாக போடி மேட்டுக்கு செல்லும் கழுதை பாதை வனப்பகுதியில் கடந்த  இரண்டு நாட்களாக  காட்டு தீ பரவி எரிந்து வருகிறது. அப்படி இருந்தும்  கூட  வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதுனால் அந்த  காட்டுதீ தொடர்ந்து  குரங்கனி  வனப்பகுதிகளிலும் எரிய தொடங்கி இருப்பது அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மலைகிராமங்களுக்கும் இவ்வழியாகதான் பலர் போய்வருகிறார்கள் அதனால் திடீரென  காட்டுதீ பரவி வருவதை கண்டு இன்னொரு குரங்கனி தீவிபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்திலையே அப்பகுதி மக்கள்  இருந்துவருகிறார்கள்எனவே வனத்துறையும் இனி மெத்தனபோக்கை தவிர்த்துவிட்டு வனப்பகுதியில் பரவிவரும் காட்டுதீயை உடனடியாக  அணைக்க முன்வரவேண்டும் என்பதுதான்  தொகுதிமக்களின்  விருப்பமாக இருந்து வருகிறது.