விஜயகாந்திடம் குறளரசன் திருமண விழா அழைப்பிதழை வழங்கிய டி.ராஜேந்தர்

விஜயகாந்தை நேரில் சந்தித்து தனது இளையமகன் குறளரசன் திருமண விழா அழைப்பிதழை வழங்கினார் இயக்குநர் டி.ராஜேந்தர்.

ர்

இயக்குநர் டி.ராஜேந்தருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இலக்கியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. காதல் தோல்வியால் தனது திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார் சிம்பு என்று தகவல். இந்நிலையில், கடந்த மாதம் ராஜேந்தரின் இளையமகனும் சிம்புவின் தம்பியான குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் அவர் மதம் மாறினார்.

ர்

முஸ்லீம் பெண்ணை காதலித்து வருவதாகவும், அதற்காகவே அவர் மதம் மாறியதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது குறளரசன் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார் ராஜேந்தர்.

குறளரசன் திருமண விழா அழைப்பிதழை தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து அவசியம் திருமண விழாவிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பின்போது குறளரசன் உடன் இருந்தார்.

kuralarasan marriage invitation Simbu T.Rajendar vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe