செந்துறைக்கு அரசு கலைக்கல்லூரியும் பேருந்து பணிமனையும் கொண்டுவருவேன் என வாக்குறுதி கொடுத்த குன்னம் எம்.எல்.ஏ., இதுவரை கொண்டுவராதது ஏன்?  - ஞானமூர்த்தி!

 Kunnam legislator promised to bring the government art college and bus workshop to Sendurai?

அரியலூர் மாவட்ட செந்துறை தி.மு.க ஒன்றியச் செலாளர் ஞானமூர்த்தி, "குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஏன் வாக்குறுதி அளித்தப்படி அரசு கலைக்கல்லூரியும் பேருந்து பணிமனையும் கொண்டுவரவில்லை" என வினா எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தது,அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் குன்னம் சட்டன்றத் தொகுதியில் இருப்பதால் ஆளும் அ.தி.மு.க சட்டமன்றத் துணை கொரடா அவரது மாவட்டமாக நினைத்து அரியலூரிலும், ஜெயங்கொண்டத்திலும் கல்லூரிகளைக்கொண்டு வந்திருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில், செந்துறை ஒன்றியம் இருந்தாலும் குன்னம் தொகுதி என்பதால் இந்த ஒன்றியத்திற்கு எந்த நலத்திட்டங்களும் கொண்டுவருவதில்லை. செந்துறை புறக்கணிக்கப்படுகிறது.

குன்னம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் செந்துறை ராஜலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் செந்துறைக்கு கலைக்கல்லூரியும், பேருந்துபணிமனையும் கொண்டுவருவேன் என உறுதியளித்ததாக மறுநாள் நாளிதழிலும் ஊடகங்களிலும் செய்தி வந்தது. இதுவரை அதில் ஒரு திட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை. சட்மன்ற உறுப்பினர் அதற்கான முயற்சி எடுக்கவில்லையா? அரசு இவரது முயற்சியை உதாசீனப்படுத்துகிறதா?செந்துறையில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கல்லூரியில் படிக்க 30 முதல் 40 கிமீ. தூரம் உள்ள அரியலூர் அல்லது உடையார்பாளையம் செல்லவேண்டும்.

போதுமான அளவு போக்குவரத்து வசதியும் இல்லை. தி.மு.க ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட பல பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். பேருந்தே செல்லாத கிராமங்கள் இன்னும் உள்ளது (முல்லையூர், செங்கமேடு, சேந்தமங்கலம், த. கூடலூர், பெரும்பாண்டி, மருங்கூர்). செந்துறை வட்டத் தலைநகராக இருந்தாலும் இன்னும் அதன் தகுதியை உயர்த்த அ.தி.மு.க அரசு முயற்சி எடுக்கவில்லை.

Ad

இந்த ஆட்சி முடிவுக்கு வர இன்னும் சில மாதங்களே உள்ளது. அதற்குள்ளாக குன்னம் சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்தவாறு, செந்துறைக்கு அரசு கலைக்கல்லூரியும், பேருந்து பணிமனையும் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

admk Ariyalur
இதையும் படியுங்கள்
Subscribe