/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/455_14.jpg)
சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது விட்டில் குடியிருந்த அஜீத் என்ற இளைஞர் கடந்த நான்கு மாதமாக வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை குணசேகர் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் குணசேகரனை இளைஞர் அஜீத் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த குன்றத்தூர் போலீசார் அஜீத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குன்றத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா காலத்தில் வேலையின்மை, வருமானமின்மையால் இது போன்ற பிரச்சனைகள் வருவதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
Follow Us