Advertisment

விருதுநகர் பாலியல் கொடூரத்தில் நான்கு பேர் மீது குண்டாஸ்

Kundas on four in Virudhunagar issue

விருதுநகரில்இளம்பெண் ஒருவர்8 பேரால் வீடியோ எடுத்து மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

Advertisment

பொள்ளாச்சி கொடூரத்தைப் போல் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். கைதான ஹரிஹரன், ஜூனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகிய 4 பேர் சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி நான்குபேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சம்பந்தமான ஆவணங்கள், உத்தரவு நகல்களை மதுரை சிறைக்கு அனுப்ப இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

kundas police Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe