Skip to main content

கள்ள லாட்டரி அதிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
sa


சேலத்தில் பிரபல கள்ள லாட்டரிச்சீட்டு அதிபர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது.


சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகரை சேர்ந்தவர் சதீஸ் என்கிற சதீஸ்குமார் (40). தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்கவும், அச்சடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சதீஸ், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்தார்.


கடந்த 2016ம் ஆண்டு சதீஸை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த பிறகும், தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தார். 


இந்நிலையில் கடந்த 18ம் தேதி குகை சிவனார் தெருவைச் சேர்ந்த ஜீவா என்பவரிடம் சதீஸ்குமார் லாட்டரி சீட்டு நம்பர் எழுதப்பட்ட துண்டு காகிதத்தைக் கொடுத்து விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த வேறு சில நபர்கள், அதிக பரிசுத்தொகை விழும் என ஏமாற்றி ஏற்கனவே இதுபோல் பலமுறை எங்களிடம் லாட்டரி சீட்டு விற்றிருக்கிறாய். ஆனால் ஒருமுறைகூட பரிசு விழவில்லை. அதனால் அந்தப் பணத்தை எல்லாம் திரும்பத் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஜீவாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்க, சதீஸ்குமார் கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளாலும் திட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் சதீஸ்குமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கத்தி மற்றும் லாட்டரி எண்கள் எழுதப்பட்ட 160 துண்டு காகிதங்களையும் கைப்பற்றினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டு வந்த சதீஸ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சேலம் மாநகர காவல்துறை துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் சதீஸ்குமாரை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

டோக்கியோ ஒலிம்பிக்ஸின் ஏழாவது நாள்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

pv sindhu and satish kumar

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸின் ஏழாவது நாளான இன்று (29.07.2021), இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

 

அதேபோல், குத்துச்சண்டை ஹெவி - வெயிட் பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். வில்வித்தையில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 

Next Story

"வடிவேலுவால் 14 கோடி ரூபாய் நஷ்டம்" - தயாரிப்பாளர் சதீஷ்குமார்

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

நகைச்சுவை நடிகர் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

vadivelu-Producer Satish Kumar-issue

 



இந்நிலையில், தயாரிப்பாளர் சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, எலி திரைப்படத்தில்  நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சனை ஆகி பாதியில் நிற்கிறது. என்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் சென்று தகராறு செய்துள்ளார். மொத்தம் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார்.

ஆனால் அதை செய்யவில்லை. சம்பள பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன். நீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறியுள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன். அவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன். தற்போது நடிகர் வலுவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்" என்று கூறினார்.