
அண்மையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குலத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா என்பவரை திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கை காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராக்கெட் ராஜா மீதுகுண்டர்சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்பொழுது ராக்கெட் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Follow Us