Advertisment

தீமிதி விழாவில் குண்டத்தில் இடறி விழுந்த பக்தர்! 

Kund during the Dimithi festival devotee incident

Advertisment

கோயில் தீமிதி திருவிழாவின் போது, கரகத்துடன் வந்தவர் குண்டத்தில் தவறி விழுந்ததால் காயமடைந்தார்.

புதுச்சேரி அருகே உள்ள கோட்டக்குப்பத்தில் உள்ள பச்சை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அப்போது, கரகத்துடன் இறங்கிய பக்தர், கால் இடறி குண்டத்தில் விழுந்தார். இருப்பினும், சில நொடிகளிலேயே அவர் எழுந்து குண்டத்தைக் கடந்துசென்றுவிட்டார். லேசான காயமடைந்த அந்த பக்தர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

incident Festival temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe