Skip to main content

குணங்குடி ஆர்.எம். அனிபாவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி...

Published on 11/08/2019 | Edited on 11/08/2019
Kunangudi R M Anifa


தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா ஹஜ் பெருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் சகோதரத் தன்மையுடன் வாழ்ந்திடவும், அனைவருக்கும் உணவு உடை இருப்பிடம் கிடைத்திடவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்'' என குறிப்பிட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்’ - எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம்!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

Cuddalore virudhachalam jawahirullah

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(40). கடந்த அக்டோபர் மாதம், இவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருத்தாசலம் கிளைச் சிறையில் கடந்த 30.10.2020 அன்று அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில், கடந்த 04-ஆம் தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மனித நேய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், ‘கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வந்த செல்வமுருகன் என்பவர் தனது வியாபாரம் சம்பந்தமாக அக்டோபர் 28 அன்று வடலூர் சென்றுள்ளார். 


வியாபாரத்திற்குச் சென்ற செல்வமுருகன் பல மணி நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, நெய்வேலி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

 

மறுதினம் காவலர்கள் செல்வமுருகனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, இந்திரா நகர் பகுதிக்கு அழைத்து “உன் கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்குப் போடப் போகிறோம்; 10 பவுன் செயின் கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகின்றோம்” என்று மிரட்டி, அவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். அக்டோபர் 30 அன்று நெய்வேலி காவல்நிலையத்தில் செல்வ முருகனைப் பார்க்கச் சென்ற அவரது மனைவியிடம் முருகன், 'காவல்துறையினர் தன்னை அடித்துச் சித்திரவதை செய்வதாக'க் கதறி அழுதுள்ளார்.

    
இந்நிலையில், நவம்பர் 4 அன்று இரவு செல்வமுருகன் விருத்தாசலம் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி, அங்கே சென்று அவரைப் பார்க்குமாறு காவல்துறையிலிருந்து செல்வமுருகன் மனைவி பிரேமாவிற்கு தொலைப்பேசியில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரேமா அங்கே சென்றபோது, செல்வமுருகன் இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

 

cnc

 

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன், காவலர்கள் தன்னை அடித்துச் சித்திரவதை செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

 

காவல்நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை மேற்கொள்ளவும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.