சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் வேளச்சேரி பகுதியில் இருந்து வருபவர்கள் பயணச் சீட்டு பெறும் இடத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக தமுமுகவின் குணங்குடி ஹனீபா ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kunangudi Hanifa.jpg)
இந்த நிலையில் தற்போது டிக்கெட் எடுக்கும் இடத்தில், ''கிண்டி பயணச்சீட்டு அலுவலகம்'' என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய குணங்குடி ஹனீபா, டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஆங்கிலம், இந்தியில் தகவல்கள் உள்ளது. அதனை மாற்றவில்லை. வெளியே ரயில் நிலையத்தில் நுழையும் இடத்தில் ''கிண்டி பயணச்சீட்டு அலுவலகம்'' என போர்டு வைத்துள்ளனர். இதுவே எனக்கு பெரிய வெற்றிதான். தமிழ் மொழியில் போர்டு இல்லை என்ற ஆதங்கத்தில் புகார் எழுதிக்கொடுத்தேன். நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மொழிக்காக எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறோம். இந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்றார்.
Follow Us