/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kumudam43434.jpg)
குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 55) மாரடைப்பு காரணமாக, சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குமுதம் வார இதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலைச் சேர்ந்தவர் ப்ரியா கல்யாணராமன். அவரது மனைவி ராஜ சியாமளா. இவரும் எழுத்தாளர் ஆவார். மறைந்த ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குமுதம் வார இதழில் தனது 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ப்ரியா கல்யாணராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)