Skip to main content

கனமழையில் இடிந்த வீடுகள், பதற்றத்தில் மற்ற தொகுப்பு வீட்டில் குடியிருக்கும் மக்கள்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

கும்பகோணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நெற்பயிர் நன்றாக வளர்ந்து வரும், சூழ்நிலையில் குளிர்ந்த பருவநிலை நிலவி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நேற்று (27.11.2019) இரவு கடுமையான மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம்போல் மழைத்தண்ணீர் தேங்கியதோடு ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன.
 

kumpakonam district continually heavy rain homes demolished


இதையடுத்து பந்தநல்லூர் அருகே சோழியவிளாகம் கிராமம் உள்ளது. நூற்றுக்கணக்கான கிராமமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு திட்டத்தின் சார்பில் 20- க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு, அங்கு கிராமத்தின் சில மக்கள்  குடியிருந்து வருகிறார்கள். 


அந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் காலபோக்கில்  பழுதடைந்து  அந்தவீடுகள் ஓவ்வொரு மழையிலும் ஒவ்வொருவீடுகள் இடிந்து சேதங்களை உருவாக்கின. அந்த வீடுகளை மராமத்து பணிகள் செய்து சீர் செய்ய வேண்டுமென பந்தநல்லூர், திருமங்கைசேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த குறைத்தீர்ப்பு முகாம்களில் குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்கு மனு அளித்தனர். அதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகேட்டு வரும் வேட்பாளர்களிடமும், வெற்றிபெற்ற  எம்,எல்,ஏ, எம்,பிக்களிடமும் மனு அளித்துள்ளனர்.

kumpakonam district continually heavy rain homes demolished


இந்த சூழலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கருணாநிதி மனைவி பங்கஜம் என்பரான விவசாய கூலித்தொழிலாளியின் தொகுப்பு வீடு இடிந்தது, தொகுப்பு வீடு மழையால் ஒழுகியதால் அவரது மகன் வீட்டில் இருந்துள்ளார். இதனால் காயங்கள் மற்றும் உயிரிழப்பு  ஏதும் ஏற்படவில்லை என்கிறார்கள். அதேபோல் சோழியவிளாகம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த மாசிலாமணி மனைவி துர்கா (வயது 28) இரண்டு ஆண்குழந்தைகள் அதில் ஒரு குழந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டது. கணவரும் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஓட்டு வீடு கனமழையால் முற்றிலும் சேதம் அடைந்தது.
 

இதுகுறித்து கிராம மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் திருவிடைமருதூர் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். " தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகளை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்கிறார் தாசில்தார் சிவகுமார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.